மிதக்கும்



முன்னெப்போதோ

உன்னில் நான் மிதந்துசென்றது

முள்ளென குத்தி நிற்கிறது

இப்போது

இறந்துவிட்ட மீனாய்

இன்னும் மிதக்கிறது

என் உடம்பெனும் தூசி கடலில்

உன் விரல்களின் பதிவு

விழித்து கிடந்த பொழுதுகளில்

நான் எப்போதும் போய் சேரவிருந்த இடம்

உன் உடல்

அதன் மனம்

அதன் குரல்

எத்தேசத்தில் கிடக்கிறது உன் முகமிழந்த உடல்?

எக்காலத்தில் மிதக்கிறது என் குரலுடைந்த உயிர்?

உன் சாயலில் திரிகிறேன் நான்

என் சாயலில் திரிகிறது உன் மரணம்


Comments